• Thu. Mar 26th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா, இஸ்ரேலால் கொல்லப்பட்ட முக்கிய இரானிய தலைவர்கள் யார்? இப்போது இருப்பது யார்?

Byadmin

Mar 26, 2026


அமெரிக்கா, இஸ்ரேலால் கொல்லப்பட்ட முக்கியமான இரானிய தலைவர்கள் யார்? இப்போது இருப்பது யார்?

பட மூலாதாரம், Getty Images

இரானை சேர்ந்த எந்தவொரு உயர் அதிகாரியையும் அனுமதிக்காக காத்திருக்காமல் தாக்குவதற்கு இஸ்ரேலிய ராணுவத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.

சில முக்கிய இரானிய தலைவர்களைக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இது வெளிவந்துள்ளது. அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் இரானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி, உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதீஃப் மற்றும் சமீபத்திய வாரங்களில் கொல்லப்பட்ட பிற மூத்த அதிகாரிகளும் அடங்குவர்.

“உளவு மற்றும் செயல்பாட்டு வட்டத்திற்கு உட்பட்ட எந்தவொரு மூத்த இரானிய அதிகாரியை கூடுதல் அனுமதியைக் கேட்காமல் கொல்வதற்கு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் நானும் இஸ்ரேலிய ராணுவத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளோம்,” என்று காட்ஸ் கூறினார்.

இந்த அதிகாரிகள் இரானின் அதிகார கட்டமைப்பில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தனர்? இப்போது யார் பொறுப்பில் இருக்கிறார்கள்? இரானின் தலைமை எவ்வாறு மாறியுள்ளது என்பதைப் பற்றி இங்கு எளிமையாகத் தெரிந்துகொள்வோம்.

ஆயதுல்லா அலி காமனெயி – அதிஉயர் தலைவர் (காலமானவர்)

இரானின் அதிஉயர் தலைவரான ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கிய முதல் நாளான பிப்ரவரி 28ஆம் தேதியன்றே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால், இது மேலதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

By admin