• Tue. Mar 17th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா, இஸ்ரேல், இரான் மூன்றும் இந்த போர் எவ்வாறு முடிய விரும்புகின்றன?

Byadmin

Mar 17, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், டொனால்ட் டிரம்ப், மொஜ்தபா காமனெயி, பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், Reuters/Getty Images

படக்குறிப்பு, (இடமிருந்து வலம்) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

‘எல்லோரும் விரும்புகிறார்கள்’ என்று சொல்ல முடியாது, ஆனால் பெரும்பாலான மக்கள் இந்தப் போர் சீக்கிரம் முடிவடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் எந்த நிபந்தனைகளின் கீழ்? அங்குதான் நிலைப்பாடுகள் வேறுபடுகின்றன.

அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் நோக்கங்கள் சற்றே தெளிவற்றதாக உள்ளன. இரானின் அணுசக்தித் திட்டத்தை கட்டுப்படுத்துவது, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கோரிக்கைகள் அனைத்திற்கும் இரானை அடிபணிய வைப்பது அல்லது இஸ்லாமியக் குடியரசு ஆட்சியை முற்றிலும் வீழ்த்துவது ஆகியவற்றுக்கு இடையே அவர் மாறி மாறித் தள்ளாடுவதாகத் தோன்றுகிறது.

இதுவரை, இரான் அடிபணியவுமில்லை, வீழ்ந்துவிடவுமில்லை. ஆனால் 16 நாட்களாகத் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல்களால் அதன் ராணுவம் கடுமையாக பலவீனமடைந்துள்ளது.

ஜெனீவாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஓமன் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே நடந்த மறைமுகப் பேச்சுவார்த்தைகள், அணுசக்தி விவகாரத்தில் முன்னேற்றம் கண்டு வந்தன.

இரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கவில்லை என்ற கூற்றுக்கு ஓரளவு உறுதியளிக்கும் வகையில், பெரிய அளவிலான சலுகைகளை வழங்க இரான் தயாராக இருந்ததாக ஓமனியர்கள் கூறுகின்றனர்.

By admin