• Thu. Mar 5th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொண்டாலும் இரான் மக்களின் ஒரே நம்பிக்கை என்ன?

Byadmin

Mar 5, 2026


இரானியர்கள்

பட மூலாதாரம், Getty Images

இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிறது.

தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள், பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்கள் மற்றும் இணைய முடக்கம் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள இரானியர்கள், தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க முயன்று வருகின்றனர்.

இரானுக்குள் இருப்பவர்களுடன் பேசுவது கடினமாக இருந்தாலும், சில இரானியர்கள் தாங்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பிபிசி பாரசீக சேவையிடம் பேசியுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களது அடையாளங்கள் மாற்றப்பட்டுள்ளன.

“கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே நடந்த 12 நாள் போரின்போது நாங்கள் அனுபவித்ததை விட இப்போது நடப்பவை மிகவும் மோசமானவை” என்று கூறிய சலார், “வெடிப்புகளின் எண்ணிக்கை, அழிவு, இப்போது என்ன நடக்கிறது என்பது எல்லாமே நம்ப முடியாததாக இருக்கிறது”என்கிறார். சலார் தெஹ்ரானில் வசிக்கிறார்.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் போரின் முதல் கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, இரானியத் தலைநகரம் பல்வேறு கட்ட தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

By admin