• Thu. Mar 5th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலால் பாரம்பரிய சின்னங்கள் சேதம்: யுனெஸ்கோவிடம் ஈரான் முறைப்பாடு

Byadmin

Mar 5, 2026


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுவீச்சு தாக்குதல்களால் நாட்டின் பாரம்பரிய சின்னங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறி, ஈரான் அரசு UNESCO அமைப்பிடம் உத்தியோகபூர்வ முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.

இந்தத் தாக்குதல்களால் ஈரானின் புகழ்பெற்ற Golestan Palace மற்றும் தெஹ்ரானில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க Grand Bazaar போன்ற முக்கிய பாரம்பரிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதில், கோலெஸ்தான் அரண்மனை 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முக்கிய வரலாற்றுச் சின்னமாகும். காஜர் வம்ச ஆட்சிக்காலத்தில் அது அரசவையாகவும் மன்னர் குடும்பத்தின் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த அரண்மனை உலக பாரம்பரியச் சின்னமாகவும் கருதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

By admin