• Tue. Feb 4th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்கா: உலகெங்கிலும் மனிதாபிமான உதவிகளை செய்து வரும் USAID அமைப்பை டிரம்ப் மூட நினைப்பது ஏன்?

Byadmin

Feb 4, 2025


அமெரிக்க அரசின் சர்வதேச வளர்ச்சி முகமை

பட மூலாதாரம், Reuters

அமெரிக்க அரசின் சர்வதேச வளர்ச்சி முகமையின் (USAID) எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது.

இதன் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, இந்த அமைப்பை அமெரிக்க அரசின் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்க அரசின் சர்வதேச வளர்ச்சி முகமை (USAID) ஆனது, இனி வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு பகுதியாக செயல்படும். ஆனால் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் ரிப்போர்ட்டின் அடிப்படையில், இச்செயல்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மனிதவளத்தை குறைக்கும் திட்டங்களும் அமெரிக்க அரசிடம் உள்ளன.

இது குறித்து திங்கட்கிழமை பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சக செயலாளர் மார்கோ ரூபியோ, USAID அமைப்பின் தலைமை தனது உத்தரவுகளை ஏற்க மறுப்பதாக குற்றம் சாட்டியதோடு, தானே தற்போது அந்த அமைப்பின் “செயல் தலைமையாக” இருப்பதாகவும் கூறினார்.

By admin