• Wed. Jan 14th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா ஒரு வீரரைக் கூட இழக்காமல் வெனிசுவேலா அதிபர் மதுரோவை சிறைபிடித்தது எப்படி?

Byadmin

Jan 14, 2026


அமெரிக்கா - வெனிசுவேலா, நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிப்பு, டிரம்ப்

பட மூலாதாரம், Donald Trump/ Truth Social

    • எழுதியவர், கேரத் எவான்ஸ்
    • இருந்து, வாஷிங்டன்

மாதக்கணக்கில், அமெரிக்க உளவாளிகள் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வந்தனர்.

வெனிசுவேலா அரசுக்குள் இருந்தபடியே உளவு சொன்ன ஒருவரையும் (source) உள்ளடக்கிய ஒரு சிறிய குழு, 63 வயதான மதுரோ எங்கு உறங்குகிறார், என்ன சாப்பிடுகிறார், என்ன உடை அணிகிறார் என்பதோடு, உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் கூறுவதுபோல், “அவரின் செல்லப்பிராணிகள்” வரையிலும் கண்காணித்து வந்தது.

அதன்பிறகு, டிசம்பர் தொடக்கத்தில், ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ என்று பெயரிடப்பட்ட ஒரு திட்டம் இறுதி செய்யப்பட்டது. இது பல மாதங்கள் நீடித்த நுட்பமான திட்டமிடல் மற்றும் ஒத்திகைகளின் விளைவாகும். இந்த ஒத்திகைகளில், அமெரிக்கப் படையினர் (Elite troops), தாங்கள் நுழைய வேண்டிய வழிகளைப் பயிற்சி செய்வதற்காக, மதுரோவின் கராகஸ் பாதுகாப்பு இல்லத்தின் உண்மையான, முழு அளவிலான பிரதியையும் உருவாக்கியிருந்தனர்.

பனிப்போருக்குப் பிறகு இல்லாத வகையில் லத்தீன் அமெரிக்காவில் அசாதாரணமான அமெரிக்க ராணுவத் தலையீட்டிற்கு வழிவகுத்த அந்தத் திட்டம் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. இதுபற்றி, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவோ அல்லது ஆலோசிக்கப்படவோ இல்லை. துல்லியமான விவரங்கள் அனைத்தும் தயாரான நிலையில், உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் தாக்குதலைத் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலைகளுக்காக வெறுமனே காத்திருக்க வேண்டியிருந்தது.

திட்டத்தின் ஆச்சரியக்கூறை (surprise element) அதிகப்படுத்த அவர்கள் விரும்பினார்கள் என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். நான்கு நாட்களுக்கு முன்னதாகவே அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்திருந்த போதிலும், சிறந்த வானிலைக்காகவும், மேகமூட்டம் குறைவாக இருப்பதற்காகவும் அவர்கள் காத்திருக்கத் தீர்மானித்ததால், ஒரு தவறான தொடக்கம் (false start) ஏற்பட்டது.

By admin