• Fri. Jan 31st, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்கா – கொலம்பியா: டொனால்ட் டிரம்ப் உத்தரவால் இரு நாடுகளுக்கும் மோதல் போக்கு ஏன்? என்ன நடந்தது?

Byadmin

Jan 27, 2025


அமெரிக்கா - கொலம்பியா, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர்

கொலம்பியா மீதான 25% வரி விதிப்பை அமெரிக்கா திரும்பப் பெற்றுளது. நாடு கடத்தப்பட்ட குடியேறிகளை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள கொலம்பியா ஒப்புக் கொண்டதால் வரிவிதிப்பு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கொலம்பிய குடியேறிகளை கொண்ட இரண்டு விமானங்களை, கொலம்பியாவில் தரையிறக்க அந்நாட்டு அதிபர் அனுமதி அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து கொலம்பியா மீது 25% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

கொலம்பிய அதிபர் குஸ்தாவோ பெத்ரோ நாடு கடத்தப்படும் குடியேறிகளை பொது மக்கள் போக்குவரத்துக்கான விமானங்கள் மூலமே அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர்களை குற்றவாளிகள் போல் நடத்தக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

தற்போது, இந்த நிபந்தனைகளை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ள அவர், அமெரிக்க ராணுவ விமானத்தில் அவர்களை அழைத்து வர ஒப்புக் கொண்டுள்ளார் எந்தவித கட்டுப்பாடும் தாமதமும் இல்லாமல் அவர்களை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார் என்றும் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin