• Wed. Jan 8th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்கா பனிப்புயல் – 5 பேர் உயிரிழப்பு, விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்

Byadmin

Jan 7, 2025


ஏழு அமெரிக்க மாகாணங்கள் அவசரநிலைகளை அறிவித்தன, அவை மேரிலாந்து, விர்ஜீனியா, மேற்கு விர்ஜீனியா, கன்சாஸ், மிசோரி, கென்டக்கி மற்றும் ஆர்கன்சாஸ்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பனிப்புயல் காரணமாக வாஷிங்டன் டிசி பகுதி முழுவதும் அலுவலகங்கள் மற்றும் உள்ளூர் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

  • எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மேன்
  • பதவி, பிபிசி

அமெரிக்கா எதிர்கொண்டுள்ள மோசமான பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவின் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, மக்கள் பயணம் செய்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் மற்றும் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

ஏழு அமெரிக்க மாகாணங்கள் அவசரநிலைகளை அறிவித்தன. அவை மேரிலாந்து, விர்ஜீனியா, மேற்கு விர்ஜீனியா, கான்சஸ், மிசோரி, கென்டக்கி மற்றும் ஆர்கன்சா ஆகும்

வட துருவத்தைச் சுற்றி வரும் குளிர்ந்த காற்றின் துருவச் சுழல் (Polar Vertex) காரணமாக இந்த தீவிர வானிலை மாற்றம் ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட 9,000 விமானங்கள் தாமதமாகியுள்ளன.

By admin