• Tue. Jun 30th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் சீனாவிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் உள்ளன?

Byadmin

Jun 30, 2026


சமீபத்திய ஆண்டுகளில் சீனா தனது அணுசக்தி திறன்களை வேகமாக நவீனப்படுத்தியுள்ளது என்று மேற்கத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Sheng Jiapeng/China News Service/VCG via Getty Images

படக்குறிப்பு, 2025 செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற தனது வெற்றி அணிவகுப்பின் போது, ​​சீனா முதன்முறையாகத் தனது தரை, கடல் மற்றும் வான் மூலோபாயப் படைகளை “அணுசக்தி முப்படை ” என்று ஒன்றிணைத்துக் காட்சிப்படுத்தியது (கோப்புப் படம்).

    • எழுதியவர், டாம் லாம்
    • பதவி, பிபிசி மானிடரிங்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சீனா தனது அணு ஆயுதக் கையிருப்பு மற்றும் உத்தி குறித்து வெளிப்படைத்தன்மையற்ற நாடாக செயல்பட்டு வருகிறது.

தனது அணு ஆயுதக் கொள்கை முதன்மையாகத் தற்காப்புக்கானது என்பதே அதன் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. அது தனது “முதலில் பயன்படுத்த மாட்டோம்” என்ற கொள்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் அதே நேரத்தில், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான முத்தரப்பு அணு ஆயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தையில் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை சீனா நிராகரித்தும் வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் சீனா தனது அணுசக்தி திறன்களை வேகமாக நவீனப்படுத்தியுள்ளது என்று மேற்கத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.

அவர்களின் மதிப்பீடுகளின் படி, சீனா 2023 மற்றும் 2025-க்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 புதிய அணு ஆயுதங்களைச் சேர்த்து வந்தது. இருப்பினும், கடந்த ஆண்டில் அது சுமார் 20 ஆகக் குறைந்துள்ளது.

By admin