• Sun. May 18th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்கா மிகச்சிறிய நாடான கத்தாரின் உறவுக்கு அதிக முக்கியத்துவம் தருவது ஏன்?

Byadmin

May 18, 2025


கத்தார் மீது ஆக்ரோஷமாக இருந்த டிரம்ப் பின்னர் நட்புடன் நெருங்கியது எப்படி?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தோஹாவில் கத்தார் அமீர் தமீம் பின் ஹமத் அல் தானியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

  • எழுதியவர், அகமது அப்துல்லா
  • பதவி, பிபிசி அரபு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் விமானம் தோகா விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அமெரிக்காவிற்கும் கத்தாருக்கும் இடையிலான உறவுகளில் ஒரு முக்கிய மாற்றத்துக்கான புதிய அத்தியாயம் தொடங்கியது.

“அமெரிக்காவுக்கும் கத்தாருக்கும் இடையில் கடந்த காலத்தில் உத்தி ரீதியாக இருந்த உறவு, இன்றும் அப்படியே தொடர்கிறது. இது வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் கொள்கையைத் தாங்கியுள்ள முக்கியத் தூண்களில் ஒன்றாகும்” என பிபிசி அரபியிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மைக்கேல் மிட்செல் தெரிவித்தார்.

ஆனால் 2025-ல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு கத்தார் வழங்கிய இந்த பிரமாண்டமான வரவேற்பு, 2017ம் ஆண்டு வளைகுடா நெருக்கடியின் போது டிரம்ப் எடுத்த கடுமையான நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணாகவே காணப்படுகின்றது.

இந்த மாற்றம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பதற்றத்திலிருந்து நல்லிணக்கத்திற்கும், போட்டியிலிருந்து கூட்டணிக்கும் எவ்வாறு மாறியுள்ளது என்பதைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய அடையாளமாக கருதப்படுகின்றது.

By admin