சட்டவிரோத குடியேற்றவாசிகளைத் தடுக்கும் பொருட்டு அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.
இதனால் அமெரிக்கா-மெக்சிகோ எல்லைக்கு கூடுதலாக 1,000 இராணுவ வீரர்களும், 500 கடற்படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர் என பென்டகன் தெரிவித்துள்ளது.
இவர்கள் ஏற்கெனவே பணியில் உள்ள 2,500 வீரர்களுடன் இணைந்து எல்லையில் ரோந்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதற்கான உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் விமானங்களுக்கு உதவ இராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அனுப்பப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, தனியார் ஊடகம் ஒன்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அளித்த பேட்டியில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை தீவிரவாதிகள் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “நமது நாட்டில் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் உள்ளனர். இந்தப் பிரச்சினையை நாங்கள் கவனித்துக் கொள்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
The post அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் இராணுவம் குவிப்பு! appeared first on Vanakkam London.