• Wed. Jan 28th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா – ரஷ்யா இடையே நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம் முடிவுக்கு வருவதால் உலகம் மீண்டும் அணு அச்சுறுத்தலுக்குள் செல்கிறதா?

Byadmin

Jan 28, 2026


முடிவுக்கு வரும் 'நியூ ஸ்டார்ட்' ஒப்பந்தம்: அமெரிக்கா - ரஷ்யா இடையே அணு ஆயுத போட்டியை தூண்டுமா?

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் பிப்ரவரி 2026-இல் முடிவடைய உள்ளது.

இது ‘நியூ ஸ்டார்ட் அணுசக்தி ஒப்பந்தம்’ (New START Nuclear Treaty) அல்லது புதிய உத்தி ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும், பல நாடுகள் தங்களின் அணு ஆயுத இருப்புகளை அதிகரித்து வருகின்றன. அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகள் அவற்றைப் பெற முயற்சிக்கின்றன. அப்படியானால், அணு ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகள் முடங்கிப்போகுமா?

சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அணு ஆயுதப் போட்டி

ஜெர்மனியின் போட்ஸ்டாம் பல்கலைக்கழகத்தின் நவீன வரலாற்றுப் பேராசிரியர் ஹெர்மன் வென்ட்கர், ”இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சித்தன” என்கிறார்.

ஜெர்மனிக்கு முன்பே அணு ஆயுதங்களை உருவாக்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து முயற்சித்தன. இந்த ரகசிய ஆராய்ச்சி ‘மன்ஹாட்டன் திட்டம்’ என்று அழைக்கப்பட்டது.

By admin