• Thu. Aug 14th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்கா – ரஷ்யா இரண்டில் இந்தியாவுக்கு எந்த நாட்டின் உறவு அதிக பலன் தரும்?

Byadmin

Aug 13, 2025


அமெரிக்கா - ரஷ்யா, இந்தியா, டிரம்பின் 50% வரி, புதின், மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் , இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (இடமிருந்து வலமாக)

ரஷ்யாவும் அமெரிக்காவும் பல ஆண்டுகளாக இந்தியாவிற்கு முக்கியமான உத்தி சார்ந்த கூட்டாளிகளாக இருந்து வருகின்றன.

தற்போதைய உலக அரசியல் சூழல், இந்தியா யாருடைய பக்கம் இருப்பது அதிக நன்மை பயக்கும் என்ற கேள்வியை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது.

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது அமலுக்கு வரும் போது, இந்தியாவின் ஏற்றுமதி மீதான அமெரிக்காவின் வரி 50 சதவீதமாக அதிகரிக்கும்.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் நீண்ட கால மற்றும் நம்பகமான உறவு உள்ளது. பாதுகாப்பு ஒப்பந்தங்கள் முதல் எரிசக்தி (கச்சா எண்ணெய்) விநியோகம் வரை ரஷ்யா இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது.

By admin