• Tue. Mar 24th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா – இரான் போரால் வெற்றி யாருக்கு? தோல்வி யாருக்கு?

Byadmin

Mar 24, 2026


அமெரிக்கா, ரஷ்யா, சீனா -  இரான் போரால் வெற்றி யாருக்கு? தோல்வி யாருக்கு?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்ட தாக்குதல்

யார்க்ஷயரில் உள்ள வீடுகளுக்கான வெப்பமூட்டும் எண்ணெய் கட்டண உயர்வு முதல், பாகிஸ்தானில் மின் கட்டணத்தைச் சேமிப்பதற்காகப் பள்ளிகள் மூடப்பட்டது வரை, மத்திய கிழக்குப் போரின் நிதி ரீதியான பாதிப்புகள் ஏற்கனவே கடுமையாக உணரப்படுகின்றன.

கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளவர்களின் நீண்ட பட்டியலுக்கு இணையாக, இதிலிருந்து பயனடைபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் யார்?

வெற்றியாளர்கள்: நார்வே, கனடா மற்றும் ரஷ்யா

புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்ட போதிலும், நாம் இப்போதும் எண்ணெய் மற்றும் எரிவாயுவையே பெரிதும் நம்பியுள்ளோம்.

அதிக அளவு எண்ணெய் இருப்புகள் உள்ள நாடுகள் பெரிய செல்வத்தை பெறலாம். அதனால்தான் கச்சா எண்ணெய் “கருப்பு தங்கம்” என்று அழைக்கப்படுகிறது.

விலைகள் உயரும் போது, உற்பத்தியாளர்கள் பொதுவாக லாபமடைகிறார்கள், அதே நேரத்தில் பயனர்கள் நஷ்டமடைகிறார்கள்.

By admin