• Wed. Nov 13th, 2024

24×7 Live News

Apdin News

அமெரிக்கா – ரஷ்யா: டொனால்ட் டிரம்ப் – புதின் இருவர் நட்பால் இந்தியாவுக்கு என்ன நன்மை? ஓர் அலசல்

Byadmin

Nov 9, 2024


டிரம்ப், புதின், மோதி, நேட்டோ, ரஷ்யா, இந்தியா, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்ப் நேட்டோவை தாக்கிப் பேசி வருகிறார், மறுபுறம் புதினும் நேட்டோ மீது எரிச்சல் கொண்டுள்ளார்

‘அமெரிக்கா தும்மினால் உலகிற்கே சளி பிடிக்கும்’

சர்வதேச அளவில் அமெரிக்காவிற்கு இருக்கும் செல்வாக்கை எடுத்துக்கூற மேலே குறிப்பிடப்பட்டுள்ள வரி அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

அப்படியிருக்க, அமெரிக்காவின் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரு சக்தி வாய்ந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போவது யார், அவருடைய நிலைப்பாடு என்னவாகும் இருக்கும் என்பதை உலகமே உற்று நோக்கியது.

டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள நிலையில், அவரது வெற்றி என்பது ‘புதிய வாய்ப்புகள் மற்றும் கவலைகள்’ ஆகிய இரண்டின் பிரதிபலிப்பாகவே உலகளவில் பார்க்கப்படுகிறது.

By admin