0
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரேனிய தலைவர்கள் முத்தரப்பு சந்திப்பில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் இரண்டாவது சந்திப்புக்காகத் திட்டமிடுவதாகக் கூறியிருக்கிறார்.
அலாஸ்காவில் நாளை (15) நடைபெறவிருக்கும் உச்சநிலை மாநாட்டுக்குப் பிறகு அந்தச் சந்திப்பு நடைபெறும்.
பின்னர், உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இந்தச் சந்திப்பில் கலந்துகொள்வார் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஷ்ய ஜனாதிபதியும் அமெரிக்க ஜனாதிபதியும் சந்தித்துக்கொள்வது இதுவே முதன்முறை.
முதல் சந்திப்பு நன்றாகவே சென்றால் உடனடியாக இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவிருப்பதாக டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்புகளை உடனடியாக நடத்தவிருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.