• Wed. Feb 18th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா – வங்கதேசம் வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன சிக்கல்? ஓர் அலசல்

Byadmin

Feb 18, 2026


அமெரிக்கா - வங்கதேசம் வர்த்தக ஒப்பந்தம், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவும் வங்கதேசமும் பரஸ்பர வரிகளை உள்ளடக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

பிப்ரவரி 9, திங்களன்று, அமெரிக்காவும் வங்கதேசமும் பரஸ்பர வரிகள் தொடர்பான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

வங்கதேசத்தின் சார்பில் வர்த்தக ஆலோசகர் ஷேக் பஷிருதீன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலிலூர் ரஹ்மான் ஆகியோரும், அமெரிக்காவின் சார்பில் வர்த்தகப் பிரதிநிதி தூதர் ஜேமிசன் கிரீர் ஆகியோரும் இந்த ஒப்பந்த ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சுமார் ஒன்பது மாதங்கள் நீடித்தன.

ஒப்பந்தத்தின்படி, வங்கதேசம் மீதான பரஸ்பர வரியை 19 சதவீதமாகக் குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த வரி இதற்கு முன்பு 37 சதவீதமாக இருந்தது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இது தவிர, அமெரிக்காவின் பருத்தி மற்றும் செயற்கை இழைகளிலிருந்து தயாரிக்கப்படும் வங்கதேசத்தின் சில சிறப்பு ஜவுளிகள் மற்றும் ஆடைகளுக்கு அமெரிக்க சந்தையில் பூஜ்ஜிய வரி விகிதத்தில் அனுமதி வழங்கும் ஒரு வழிமுறையை உருவாக்கவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

By admin