• Wed. Oct 14th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா ஹூத்தி தாக்குதலை தடுக்க சௌதி அரேபியாவுக்கு உதவாதது ஏன்? 4 முக்கிய காரணங்கள்

Byadmin

Oct 14, 2026


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (இடதுபுறம்), சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான்

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (இடதுபுறம்), சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன், நவம்பர் 18, 2025 அன்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தபோது எடுத்த படம்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி ஆயுதக் குழு, இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு சௌதி அரேபியா முழுவதும் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ரியாத்தின் முக்கிய சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களில் அமெரிக்க குடிமகன் ஒருவரும் அடங்குவார்.

இந்தத் தாக்குதல்கள், சௌதி அரேபியாவை நிதி மையமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ‘விஷன் 2030’ திட்டம் குறித்து தற்போது தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளன.

சௌதி அரேபியா இத்தனை தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அமெரிக்கா ஏன் அதற்கு உதவவில்லை என்ற கேள்வி பெரும்பாலானோரின் மனதில் எழுந்து வருகிறது.

By admin