• Tue. Nov 5th, 2024

24×7 Live News

Apdin News

அமெரிக்கா 19 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது ஏன்? இந்தியா கூறுவது என்ன?

Byadmin

Nov 3, 2024


19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி

யுக்ரேனில் ரஷ்யா நடத்தி வரும் போருக்கு உதவும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி, அமெரிக்க அக்டோபர் 30ஆம் தேதியன்று (புதன்கிழமை) 19 இந்திய நிறுவனங்கள் மற்றும் இரண்டு இந்தியர்கள் உள்பட 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது தடை விதித்துள்ளது.

இந்திய பிரஜை ஒருவர் சீக்கிய பிரிவினைவாத ஆதரவு தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவை அமெரிக்க மண்ணில் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டால் இரு நாட்டிற்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில் அமெரிக்கா இந்தத் தடையை அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “மூலோபாய வர்த்தகம் மற்றும் பரவல் தடை (non-proliferation) தொடர்பாக வலுவான சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை இந்தியா கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழில் அக்டோபர் 24ஆம் தேதியன்று வெளியான நேர்காணல் ஒன்றில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, “பன்னுவின் கொலை முயற்சிக்கான பொறுப்பு யாருடையது என்பதை உறுதியாக அறிந்தால் மட்டுமே அமெரிக்கா திருப்தி அடையும்,” என்று தெரிவித்துள்ளார்.

By admin