• Tue. Nov 5th, 2024

24×7 Live News

Apdin News

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: இறுதிக் கட்டத்தை நெருங்கும் பிரசாரம் – சமீபத்திய தகவல்கள்

Byadmin

Nov 5, 2024


அமெரிக்க அதிபர் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கமலா ஹாரிஸ் – டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதித் தருணம் நெருங்கிவிட்ட நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இரண்டு அதிபர் வேட்பாளர்களும் ஒரு இறுதி பிரச்சார நிகழ்வுக்கு தயாராகி வருகிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 5) நடைபெற உள்ளது.

அதே சமயத்தில், அமெரிக்காவின் தேர்தல் ஒருமைப்பாட்டிற்கு ரஷ்யா மிகத் தீவிரமான ஒரு அச்சுறுத்தல் என அமெரிக்க புலனாய்வு சமூகம் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கை தெரிவிக்கிறது.

மறுபுறம், டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது அவரது நிர்வாகத்தில் பணியாற்றிய ஜான் போல்டன், “தேர்தலில் தோல்வியுற்றால், அந்த முடிவை ஏற்க டிரம்ப் நிச்சயம் மறுப்பார் என்று நான் நம்புகிறேன்,” என்று பிபிசியிடம் கூறினார்.

By admin