• Tue. Oct 15th, 2024

24×7 Live News

Apdin News

அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்ட் டிரம்ப் மீது மூன்றாவது தாக்குதல் முயற்சியா?

Byadmin

Oct 15, 2024


டிரம்ப், அமெரிக்கா, அதிபர் தேர்தல் 2024, கமலா ஹாரிஸ், ஜோ பைடன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அக்டோபர் 12-ஆம் தேதி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கோச்செல்லா நகரில் டொனால்ட் டிரம்பின் பேரணி நடைபெற்றது

சனிக்கிழமையன்று (அக்டோபர் 12), அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கோச்செல்லா நகரில் டொனால்ட் டிரம்பின் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி நடந்த இடத்திற்கு அருகிலுள்ள சந்திப்பில், ஒரு வேட்டைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நிறைந்த கைத்துப்பாக்கியைச் சட்டவிரோதமாக வைத்திருந்த ஒரு நபரைக் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வெம் மில்லர் எனப்படும் 49 வயதான அந்த சந்தேகத்திற்குரிய நபர், ஒரு கறுப்பு நிற எஸ்.யூ.வி வாகனத்தை ஓட்டிச் சென்றபோது காவல்துறை சோதனையில் சிக்கியுள்ளார். ஒரு ​​ஒரு பாதுகாப்புச் சோதனைச் சாவடியில், அவரது காரை நிறுத்திச் சோதித்த போது, இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ‘அதிக திறன் கொண்ட ஒரு மேகசின் (Magazine)’ ஆகியவற்றைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

எந்த அசம்பாவிதமும் நடப்பதற்கு முன்னதாகவே மில்லர் கைது செய்யப்பட்டார் என ரிவர்சைடு கவுண்டி காவல்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் லோட் செய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் அதிக திறன் கொண்ட மேகசினை வைத்திருந்த குற்றத்திற்காக அவருக்கெதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனால் டிரம்புக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்றும், இந்தச் சம்பவம் அவரது பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதிக்கவில்லை என்றும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

By admin