அமெரிக்க அதிபர் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்?
அமெரிக்க அதிபர்கள் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?
மிக அதிகாரமிக்க ஒரு பதவி என்பதால் மில்லியன்களில் சம்பாதிக்கலாம் என நீங்கள் கருதலாம். ஆனால் அவர்கள் மக்கள் பணியாளர்கள். எனவே வரி செலுத்துபவர்கள் குறித்து யோசிக்க வேண்டும்.
ஜோ பைடனுக்கு ஒரு வருடத்திற்கு 4 லட்சம் அமெரிக்க டாலர்களும் கூடுதலாக செலவிற்காக 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் கிடைக்கும். அவருக்கு இலவச வீடும் கிடைக்கும். அதுதான் வெள்ளை மாளிகை. கூடுதலாக அவரின் விருப்பத்திற்கேற்ப அலங்கரிக்க ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும்.
மேலும் என்னென்ன சலுகைகள் அதிபருக்கு வழங்கப்படும் என்று தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.