• Sun. May 18th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்க உடற்பயிற்சி நிலைய துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!

Byadmin

May 18, 2025


அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் வழக்கம்போல் பலர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் அங்கு நுழைந்து, அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினார்.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

அந்த நபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற நிலையில், அங்கு விரைந்த பொலிஸார் அவரை சுட்டுக் கொன்றனர்.

காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

By admin