0
அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்புக்கும் அவருடைய முக்கிய ஆதரவாளரும் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மார்ஜரி டெய்லர் கிரீனுக்கும் (Marjorie Taylor Greene) இடையே சர்ச்சை மூண்டுள்ளது.
அமெரிக்க குடியரசுக் கட்சிக்குள் இதுவரை கண்டிராத விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் இடைத்தவணைத் தேர்தலில் கிரீனுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டெயின் (Jeffrey Epstein) குறித்த கோப்புகளின் தொடர்பில் அண்மையில் சர்ச்சை ஏற்பட்டது.
டிரம்ப் அவற்றின் வெளியீட்டைத் தடுக்க முயன்றதாகத் கிரீன் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், டிரம்ப் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களைப் பயமுறுத்த தன்னைக் குறிவைத்துள்ளார் என்றும் அவர் கூறினார். தற்போது தம் பாதுகாப்புக்கு ஆபத்துகள் அதிகரித்திருப்பதாகவும் கிரீன் கூறினார்.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், எப்ஸ்டெயின் கோப்புகளின் வெளியீடு பற்றித் தாம் கவலைப்படவில்லை என்றும் கிரீனை எதிர்த்து நிற்கும் வேட்பாளருக்கு வாக்காளர்கள் ஆதரவளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.