• Sat. Jan 25th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்க குரியுரிமை விவகாரம்; டிரம்பின் உத்தரவுக்கு வாஷிங்டன் நீதிமன்றம் இடைக்கால தடை!

Byadmin

Jan 25, 2025


அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இரத்து செய்தார்.

இந்த உத்தரவு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிராக வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் உள்ளிட்ட 22 ஜனநாயக கட்சி தலைமை வகிக்கும் மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதனை விசாரணைக்கு எடுத்தக்கொண்ட வாஷிங்டன் நீதிமன்றம், ஜனாதிபதி டிரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தவு பிறப்பித்துள்ளது.

பிறப்பின் அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்யும் ஜனாதிபதி டிரம்பின் உத்தரவு, அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று வாஷிங்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் குறித்த உத்தரவை அமல்படுத்த வேண்டாம் என்றும் வாஷிங்டன் நீதிமன்றம் அமெரிக்க அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, வாஷிங்டன் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அமெரிக்க டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin