• Wed. Jan 21st, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்க டாலருக்கு மாற்றாக தங்கத்தை வாங்கிக் குவிக்கும் சீனா, ரஷ்யா – இந்தியா என்ன செய்கிறது?

Byadmin

Jan 21, 2026


சீனா, தங்கம், சர்வதேச கையிருப்பு, உலக பொருளாதாரம்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, சீனா தனது தங்க கையிருப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    • எழுதியவர், சித்தார்தா ராய்
    • பதவி, சீன விவகாரங்கள் நிபுணர்

2025 ஆம் ஆண்டில், உலகின் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் தங்கத்தின் மொத்த மதிப்பு, அவை அமெரிக்க அரசின் கருவூல பத்திரங்கள் மீது செய்துள்ள முதலீட்டைக் காட்டிலும் அதிகமாகியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக இவ்வாறு நிகழ்ந்துள்ளது.

மத்திய வங்கிகள் வைத்துள்ள தங்கத்தின் கையிருப்பு 4 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க கருவூல பத்திரங்களின் மீது செய்யப்பட்ட முதலீடுகள் 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக தொடர்கிறது.

அமெரிக்க டாலருக்கு பிறகு, யூரோவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது பெரிய சர்வதேச கையிருப்பாக தங்கம் மாறியுள்ளது.

2022-ஆம் ஆண்டு ரஷ்யாவின் சொத்துகளை முடக்கிய பிறகு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கும் நடவடிக்கையை வேகப்படுத்தியதால் இந்த மாற்றமானது நிகழ்ந்துள்ளது.

அதனைத் தொடர்ந்த மூன்று ஆண்டுகளில், மத்திய வங்கிகள் ஆண்டுக்கு ஆயிரம் டன்னுக்கும் அதிகமான தங்கத்தை வாங்கின. அதன் விலை உச்சத்தில் இருந்தபோதும் கூட 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 634 டன் தங்கம் வாங்கப்பட்டது.

By admin