• Wed. May 14th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்க தலையீட்டை இந்தியா விரும்பாதது ஏன்? – “டிரம்பிற்கு இடம் கொடுத்தால், அவர் காலூன்றிவிடுவார்”

Byadmin

May 13, 2025


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “எந்தவொரு அணு ஆயுத மிரட்டலையும் இந்தியா பொறுத்துக்கொள்ளாது”: பிரதமர் நரேந்திர மோடி

  • எழுதியவர், நிதின் ஸ்ரீவாஸ்தவ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற கொடூரமான தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து, அதுவொரு ராணுவ மோதலாக மாறியது. இந்த மோதல் மே 10ஆம் தேதி மாலையில் போர் நிறுத்த அறிவிப்புடன் முடிவுக்கு வந்தது.

இருந்தபோதிலும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலின் போதும், அதை நிறுத்திக் கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்ட பின்னரும், பரவலாக விவாதிக்கப்பட்ட பல கேள்விகள் எழுந்துள்ளன.

முக்கியமாக விவாதிக்கப்பட்ட விஷயங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப், என்பது குறிப்பிடத்தக்கது. அவர்தான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை நிறுத்தத்தை முதலில் அறிவித்தார். அதேபோல, இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் இருப்பது குறித்தும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

பாதுகாப்புப் படையினர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாதுகாப்புப் படையினர்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக மத்திய அரசு கூறி வருவது குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.

By admin