6
அமெரிக்க நீதிமன்றத்தில் Meta நிறுவனத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
அந்த நிறுவனம் Instagram, WhatsApp இரண்டையும் வாங்கிக் கொண்டதால் சமூக ஊடகத்தில் அது ஏகபோக உரிமையைப் பெறவில்லை என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
ஏகபோக உரிமையை ஒரு சில நிறுவனங்களே வைத்திருப்பதை முறியடிக்கவேண்டும் என்ற அமெரிக்க அதிகாரிகளின் முயற்சிக்கு இந்தத் தீர்ப்பு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Facebook உரிமையாளரான Metaவுக்குத் தீர்ப்பு சாதகமாக அமைந்திருக்கிறது. எனவே, அது இனி Instagram, WhatsApp இரண்டையும் விற்க வேண்டியதும் இல்லை, நிறுவனத்தை மறுசீரமைக்க வேண்டிய அவசியமும் இல்லை.
சமூக ஊடகச் சந்தை வேகமாக மாறிவிட்டது என்ற Meta நிறுவனத்தின் வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டார். ஐந்து ஆண்டுக்கு முன்பு இருந்த நிலை இன்றில்லை என்று Meta சொல்வது உண்மைதான் என நீதிபதி தீர்ப்பில் கூறினார்.