• Fri. Aug 29th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க ஹெச்.ராஜா வேண்டுகோள் | H Raja appeals to boycott American goods

Byadmin

Aug 29, 2025


ஈரோடு: அமெரிக்க பொருட்களை புறக்கணிக்குமாறு பாஜக தேசிய செயற் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கூறினார்.

இந்து முன்​னணி சார்​பில் ஈரோடு மாவட்​டம் கோபி​யில் நடை​பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா​வில் பங்​கேற்ற ஹெச்​.​ராஜா,பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வுக்கு எதி​ராக அமெரிக்கா 50 சதவீதம் வரி​வி​தித்​துள்​ளது. இதனால், முன்​னாள் பிரதமர் மன்​மோகன்​சிங் காலத்​தில் கொண்​டு​வரபட்ட ‘காட்’ உடன்​படிக்கை தோற்​றுப்போயுள்​ளது. நாட்டு மக்​கள் சுதேசி உற்​பத்​திப் பொருட்​களை வாங்க வேண்​டும். அமெரிக்க பொருட்​களை ஆன்​லைன் மூலம் வாங்க மாட்​டோம் என்று அனைவரும் முடி​வெடுக்க வேண்​டும்.

அமெரிக்​கா​வின் பொருளா​தார நடவடிக்​கைக்​கு, மற்​றொரு பொருளா​தார நடவடிக்கை மூல​மாக மட்​டுமே பதில் கொடுக்க வேண்​டும். மற்ற நாடு​களோடு வர்த்​தகத்தை அதி​கரிப்​ப​தன்மூலமாக, அமெரிக்​காவின் வரிவிதிப்​பால் ஏற்​படக் கூடிய இழப்பை சரி செய்ய முடி​யும். ஜிஎஸ்​டி வரி விதிப்பில் சீர்​திருத்​தத்தை கொண்​டுவர மத்​திய அரசு நடவடிக்கை எடுத்து வரு​கிறது. சிறு​பான்​மை​யினர் வாக்​கு​கள் மட்​டுமே போதும் என தவெக தலை​வர் விஜய் முடிவு செய்​துள்​ளார் என்​பது அவரது பேச்​சில் தெரிய​வரு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.



By admin