• Tue. Apr 15th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்க வரி: ஸ்மார்ட்போன்கள், கணினிகளுக்கு விலக்கு அளித்த டிரம்ப்

Byadmin

Apr 14, 2025


அமெரிக்க அதிபர், டொனால்ட் டிரம்ப், வரிவிதிப்பு, ஆப்பிள் ஐ போன், சீனா

பட மூலாதாரம், Reuters

  • எழுதியவர், மடலின் ஹால்பர்ட்
  • பதவி, பிபிசி

அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம், பரஸ்பர வரியிலிருந்து ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் சில மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இந்த விலக்கு 125% வரி விதிக்கப்பட்ட சீன இறக்குமதிகளுக்கும் பொருந்தும்.

பெரும்பாலான நாடுகளுக்கு டிரம்ப் விதித்த 10% இறக்குமதி வரியிலிருந்தும், சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட அதிகளவிலான வரியிலிருந்தும் இந்த பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுங்கத் துறை மற்றும் எல்லைக் காவல் ஏஜென்சியின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட வரிகளில் இருந்து முதல் தளர்வை இது குறிக்கிறது. இதனை “முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வு” என வர்த்தக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சனிக்கிழமை இரவு மியாமிக்கு செல்லும் போது, விலக்கு குறித்த கூடுதல் தகவல்களை அடுத்த வார தொடக்கத்தில் தருவதாக டிரம்ப் கூறினார்.

By admin