1
அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளும் முன்னர், அந்நாட்டின் விசா விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்குவதை உறுதி செய்யுமாறு இலங்கை பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், B1/B2 பார்வையாளர் விசா வணிகக் கூட்டங்களில் பங்கேற்பது, ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவது போன்ற செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், வேலைவாய்ப்பு அல்லது வேலை தொடர்பான எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு வேறு வகையான விசா அவசியம் என்பதையும் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலத்தில் அங்கீகரிக்கப்படாத வேலைகளில் ஈடுபடுவது நாடுகடத்தலுக்கு வழிவகுக்கும் என்றும், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான கைது நடவடிக்கைகள் அதிகரித்து வரும் பின்னணியில், இந்த அறிவுறுத்தல் தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.