• Wed. Mar 26th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்க விடுதியில் துப்பாக்கி சூடு; 6 பேர் காயம்

Byadmin

Mar 25, 2025


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

விடுமுறையை முன்னிட்டு இடம்பெற்ற சிறப்பு இசை நிகழ்ச்சியில்ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது.

By admin