• Thu. Jan 9th, 2025

24×7 Live News

Apdin News

அமைச்சர் கோவி.செழியனுக்கு பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court orders to issue passport to Minister govi Chezhiyan

Byadmin

Jan 6, 2025


மதுரை: குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்ட நிலையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனுக்கு பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன். தஞ்சாவூர் மாவட்டம் ராஜாங்கநல்லூரைச் சேர்ந்தவர். இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கடந்தாண்டு செப். 9-ல் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பம் சரிபார்ப்புக்காக பந்தலூர் காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. பந்தலூர் காவல் நிலையத்தில் கிராம மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக என் மீது குற்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இது குறித்து பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.

இதை காரணமாக வைத்து எனக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்து வருகின்றனர். பாஸ்போர்ட் வழங்க முதல் தகவல் அறிக்கை ஒரு தடையல்ல என பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே எனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கெளரி விசாரித்து, குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகள் உள்ளன. அதன் அடிப்படையில் மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்க திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.



By admin