• Thu. Mar 13th, 2025

24×7 Live News

Apdin News

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு: உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி பாஜக பிரமுகர் மனு | BJP member who threw mud at Minister Ponmudi files bail plea: HC orders police to respond

Byadmin

Mar 12, 2025


சென்னை: அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசியதாக கைதான பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு சம்பந்தப்பட்ட காவல் துறையினர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை எனக்கூறி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி மீதும், அவரது மகனும் திமுக முன்னாள் எம்பியுமான கவுதம சிகாமணி மீதும் சேற்றை அள்ளி வீசினர்.

இ துதொடர்பாக பாஜக பிரமுகரான ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது திருவெண்ணைய்நல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராமகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு சம்பந்தப்பட்ட போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.



By admin