• Wed. Apr 16th, 2025

24×7 Live News

Apdin News

அமைச்​சர் பொன்​முடி மீது சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் பாஜக புகார் | BJP files complaint against Minister Ponmudi at Commissioner office

Byadmin

Apr 16, 2025


சென்னை: சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் ஏ. அஷ்வத்தாமன் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அமைச்சர் பொன்முடி சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் சைவம், வைணவம் குறித்து, பட்டை அணிதல், திருநாமம் அணிதல் உள்ளிட்ட இந்து தர்ம குறியீடுகளை செய்கையாக காண்பித்து, அமைச்சர் பொன்முடி அவதூறாகவும், கொச்சையாகவும் பேசியுள்ளார். வேண்டுமென்றே ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், இரு பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும் அவரது பேச்சு அமைந்திருக்கிறது.

அதுமட்டுமில்லாமல், ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலமாக வேண்டுமென்றே உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட பிரிவினரை சினமூட்டும் நோக்கத்திலும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் வகையிலும், பெண்களின் மாண்பை குலைக்கும் விதத்திலும் அவர் பேசியுள்ளார். எனவே, அமைச்சர் பொன்முடி மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



By admin