• Sat. Jan 10th, 2026

24×7 Live News

Apdin News

அமைச்சர் விஜித ஹேரத் – உலகப்புகழ் பெற்ற ஜூடோ வீரர் ஆதம் யந்தியேவ் இடையில் விசேட கலந்துரையாடல்!

Byadmin

Jan 10, 2026


ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் “ஸலாம் கப்” (Salam Cup) தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியை கொழும்பில் நடத்துவது குறித்து அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் “ஸலாம் கப்” போட்டியின் நிறுவனர் ஆதம் யந்தியேவ் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் வியாழக்கிழமை (08) நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் இலங்கையில் விளையாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

“ஸலாம் கப்”  போட்டியின் ஒரு பகுதியை கொழும்பில் நடத்துவது இலங்கையின் விளையாட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்த உதவும் எனவும் சர்வதேச விளையாட்டு அரங்கில் இலங்கையை உயர் மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஒரு முக்கிய சந்தர்ப்பமாகவும் அமையும் எனவும் ஆதம் யந்தியேவ் சுட்டிக்காட்டினார்.

By admin