• Wed. Dec 25th, 2024

24×7 Live News

Apdin News

அம்பானி குடும்பம் உலகின் முதல் 10 பணக்கார குடும்பங்கள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளது?

Byadmin

Dec 24, 2024


பணக்காரர் பட்டியல், இந்தியா, அம்பானி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகேஷ் அம்பானி

உலகின் மிக பணக்கார குடும்பங்கள் பற்றிய பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வால்டன் குடும்பம் முதலிடத்தை பிடித்துள்ளது.

வால்டன் குடும்பம் உலகம் முழுவதும் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டை நடத்திவருகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்பு, ஸாம் வால்டன் இந்த சங்கிலியின் முதல் சூப்பர்மார்க்கெட்டை திறந்தார். இன்று அவரது சந்ததியினர் முன்பை விட அதிக செல்வம் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

இதற்கு காரணம், இந்த பன்னாட்டு நிறுவனத்தின் பங்குகளின் அபாரமாக செயல்திறன் ஆகும். தற்போது இந்நிறுவனத்தின் மதிப்பு 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு டாப்10 பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான குடும்பங்கள் பங்குச் சந்தையால் பெரிதும் பயனடைந்துள்ளன.

இந்த பட்டியலில் மொத்தம் 25 குடும்பங்கள் உள்ளன. முதல் பத்து இடங்களில் எந்தெந்த குடும்பங்கள் இருக்கின்றன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

By admin