கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்பவம் அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி – உமிரி கடற்கரையில் இன்று மாலை இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
தாண்டியடி – உமிரி பகுதியில் தந்தை (வயது 38), மகன் (வயது 15) மற்றும் அவர்களின் உறவினரின் மகன் (வயது 18) என மூவர் கிறிஸ்மஸ் தினமான இன்று கடற்கரையில் பொழுதைக் கழிக்கச் சென்றனர். இதன்போது அவர்கள் கடலில் நீராடினர். அவ்வேளை கடல் அலையில் சிக்கிய அவர்கள் மூவரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
அவர்களின் சடலங்களைத் தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.