0
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை, உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட சம்பவத்தையடுத்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உஹன பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்த இரண்டு பிள்ளைகளைப் பாதுகாப்பற்ற முறையில் ஓட்டோவில் அழைத்துச் செல்ல முயன்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேரர் அந்தப் பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டார் என்று தெரிவிக்கப்படும் காணொளி ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.