• Mon. Dec 23rd, 2024

24×7 Live News

Apdin News

அம்பேத்கர், அமித் ஷா – இந்த சர்ச்சையால் காங்கிரஸ் ஏதேனும் அடைந்த பலன் என்ன? ஓர் ஆய்வு

Byadmin

Dec 23, 2024


அமித் ஷா, ராகுல் காந்தி, அம்பேத்கர் விவகாரம், நாடாளுமன்றம்

பட மூலாதாரம், ANI

“அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… இத்தனை முறை நீங்கள் கடவுளின் பெயரை கூறி இருந்தால் ஏழு ஜென்மங்களுக்கும் உங்களுக்கு சொர்க்கம் கிடைத்திருக்கும்…”

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உரையில் இடம் பெற்றிருந்த இந்த சிறிய பகுதி சமூக வலைதளங்களில் வைரலானது.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், போராட்டங்களுக்கு மத்தியில் முடிவுற்றது. நாடாளுமன்றத்தில் அமித் ஷா, அம்பேத்கர் குறித்து பேசியதே அந்த போராட்டங்களுக்கு காரணம்.

அதற்கு முன்பு, பிரியங்கா காந்தியின் முதல் நாடாளுமன்ற உரை, ஒரு நாடு ஒரு தேர்தல் மசோதா போன்ற விவகாரங்கள் விவாதத்திற்கு ஆளாகின.

By admin