• Wed. Dec 18th, 2024

24×7 Live News

Apdin News

அம்பேத்கர் சர்ச்சை: அமித் ஷா என்ன பேசினார்? காங்கிரஸ், திமுக குற்றச்சாட்டிற்கு அவர் அளித்த விளக்கம் என்ன?

Byadmin

Dec 18, 2024


நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கடந்த செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமித் ஷா தனது உரையின்போது, ​​டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மரபு குறித்துப் பேசினார். அப்போது, “இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது” என்று அமித்ஷா கூறினார்.

“இது இப்போது ஃபேஷனாகிவிட்டது. அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… இந்த அளவுக்கு கடவுளின் பெயரைப் பயன்படுத்தினால், ஏழு பிறவிகளுக்கும் நாம் சொர்க்கத்தை அடையலாம்” என்று அமித் ஷா தெரிவித்தார்.

அமித் ஷா பேசிய முழு உரையின் இந்தச் சிறிய பகுதி குறித்துப் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

By admin