• Tue. Apr 15th, 2025

24×7 Live News

Apdin News

அம்பேத்கர் பிறந்த நாள்: பெண் விடுதலை முதல் சாதி ஒழிப்பு வரை – அம்பேத்கர் கூறும் ஜனநாயகத்தின் 3 சக்திகள் எவை?

Byadmin

Apr 14, 2025


அம்பேத்கர் ஜெயந்தி, அம்பேத்கர் பிறந்த தினம், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம், GOVERNMENT OF MAHARASHTRA

படக்குறிப்பு, அம்பேத்கரைப் பொறுத்தவரை இந்திய வரலாறு என்பது, குறிப்பாக பண்டைய வரலாறு, என்பது பௌத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையே நடைபெற்ற தார்மீக மோதலாகும்

  • எழுதியவர், முனைவர் ஜத்திந்தர் சிங்
  • பதவி, ஓய்வு பெற்ற பேராசிரியர், பஞ்சாபி பல்கலைக்கழகம்

1970-களில் மகாராஷ்டிராவில் அம்பேத்கரியவாதிகள், தலித் சிறுத்தைகள் அமைப்பினர், மற்றும் இதர இயக்கங்களைச் சார்ந்தவர்கள் பல்முனை போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்தினார்கள்.

சமூக நீதிக்காகவும், தலித்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் போராட்டத்தை நடத்தினார்கள்.

அதே சமயத்தில், அம்பேத்கர் எழுதிய படைப்புகளை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து தீவிர சிந்தனையாளர்கள் பலர் பாரிய அளவில் போராட்டங்களை நடத்தினார்கள்.

மாநில அரசுக்கு மனுக்களை அனுப்பினார்கள். அரசியல் கட்சிகள் அம்பேத்கரின் எழுத்துகளை வெளியிட வற்புறுத்துமாறு நீதிமன்றத்தின் கதவுகளையும் அவர்கள் தட்டினார்கள்.

By admin