0
அமெரிக்க அரசாங்கத்தின் முன்னாள் சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித் மீது அமெரிக்க அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வழக்கறிஞரே அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் மீது வழக்குத் தொடுத்திருந்தவர் ஆவார்.
ஸ்மித்தின் நடவடிக்கைகள் 2024 ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பதை ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதை விசாரிக்கும்படி, குடியரசுக் கட்சியின் செனட்டர் டாம் கோட்டன் அமெரிக்க அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
ஸ்மித் 2022இல் அரசாங்கச் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2020இன் ஜனாதிபதி தேர்தல் முடிவை மாற்றியமைக்க முயன்றதாகவும் இரகசிய ஆவணங்களைத் தவறாகக் கையாண்டதாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இந்த இரு குற்றச்சாட்டுகளையும் டிரம்ப் மறுத்தார். அத்துடன், இரு வழக்குகளும் விசாரணைக்கும் அவர் செல்லவில்லை.
2024இல் டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அரசாங்கச் சிறப்பு வழக்கறிஞர் இரு வழக்குகளையும் கைவிட்டார்.
அதேவேளை, டிரம்ப் தம்மைப் பணியிலிருந்து நீக்குவதற்கு முன்னர் ஸ்மித் தாமாகவே பதவி விலகினார்.