0
பிரான்ஸின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நேற்றுப் புதன்கிழமை பதவியேற்றார்.
நாடு முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்ற ஒரு நாளில் அவர் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றார்.
கடனைக் குறைக்கும் பட்ஜெட்டை நிறைவேற்றுவதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டறியவும், புதிய கொள்கை திசைகளை உருவாக்கவும் அவர் உறுதியளித்தார்.
ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன், தனது இரண்டு ஆண்டு ஆட்சியில் ஐந்தாவது பிரதமராக, தனக்கு விசுவாசமான லெகோர்னுவை செவ்வாய்க்கிழமை அன்று தேர்ந்தெடுத்தார்.
தொடர்புடைய செய்தி : நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பிரான்ஸ் பிரதமர்!
லெகோர்னு, நாட்டின் மிகப்பெரிய பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான தனது திட்டங்களால் நாடாளுமன்ற நம்பிக்கையை இழந்த பிரான்சுவா பய்ருவுக்குப் (Francois Bayrou) பதிலாக நியமிக்கப்பட்டார்.