• Thu. Aug 7th, 2025

24×7 Live News

Apdin News

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக திட்டங்களை திமுக அரசு ரத்து செய்துவிட்டது: இபிஎஸ் குற்றச்சாட்டு | EPS alleges dmk govt has cancelled aiadmk projects due to political vendetta

Byadmin

Aug 6, 2025


தென்காசி: அ​தி​முக கொண்​டு​வந்த பல்​வேறு திட்​டங்​களை, அரசி​யல் காழ்ப்​புணர்ச்சி காரண​மாக திமுக அரசு ரத்து செய்துவிட்டதாக எதிர்​கட்​சித் தலை​வரும், அதி​முக பொதுச் செய​லா​ள​ரு​மான பழனி​சாமி கூறி​னார். தென்​காசி, அம்​பாச​முத்திரம், ஆலங்​குளத்​தில் நேற்று காலை பிரச்​சா​ரம் மேற்​கொண்ட அவர் குற்​றாலத்​தில் மாற்​றுத் திற​னாளி​களு​டன் கலந்​துரையாடி​னார்.

தமிழக மாற்​றுத் திற​னாளி​கள் சட்ட பாது​காப்பு சங்க மாநிலத் தலை​வர் ஆர்​.சண்​முகசுந்​தரம் பேசும்​போது, “அதி​முக ஆட்சி அமைந்​தவுடன் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான மாத உதவித்​தொகையை ரூ.3 ஆயிர​மாக உயர்த்தி வழங்க வேண்​டும். அதிமுகவில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு தனி அணியை உரு​வாக்க வேண்​டும்” என்​றார்.

பின்​னர் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பேசி​ய​தாவது: வாழ்க்கை போராட்​டத்தை எதிர்​கொண்​டுள்ள மாற்​றுத் திறனாளிகளுக்கு தேவை​யான உதவி​கள், அதி​முக ஆட்சி அமைந்​தவுடன் செய்து கொடுக்​கப்​படும். படித்த மாற்​றுத் திறனாளிகளுக்கு வேலை​வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்​றார்.. தொடர்ந்து, அரசுப் பள்​ளி​களில் பயின்று 7.5 சதவீத இடஒதுக்​கீட்​டில் மருத்​துவ படிப்​பில் சேர்ந்த மாணவ, மாணவி​கள், பழனி​சாமியை சந்​தித்து நன்றி தெரி​வித்​தனர்.

பின்​னர், விவ​சா​யிகள், மண்​பாண்​டத் தொழிலா​ளர்​கள், நெச​வாளர்​களு​டன் கலந்​துரை​யாடிய​போது பழனி​சாமி பேசி​ய​தாவது: தாமிரபரணி ஆற்​றில் எந்​தெந்த இடத்​தில் தடுப்​பணை கட்ட வேண்​டும் என்​பது குறித்து ஆய்வு செய்து வைத்​திருந்​தோம். ஆனால், அடுத்து ஆட்​சிக்கு வந்த திமுக அதை அமல்​படுத்​த​வில்​லை.

அரசி​யல் காழ்ப்​புணர்ச்​சி​யால் நாங்​கள் கொண்​டு​வந்த பல திட்டங்களை திமுக ரத்து செய்​து​விட்​டது. பாப​நாசம் அணைஉபரிநீரை மணி​முத்​தாறு அணைக்கு கொண்டு செல்​லும் திட்​டத்தை ஆய்வு செய்​து, உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும். அதி​முக ஆட்சி மீண்டும் வரும்​போது விவ​சா​யிகளின் கோரிக்​கைகள் நிறைவேற்றப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.



By admin