• Wed. Aug 19th, 2026

24×7 Live News

Apdin News

அரசு உதவித்தொகையில் தமிழக மாணவர்கள் பிரிட்டனில் பயில இந்த ஆண்டு புதிய சிக்கல் – என்ன காரணம்?

Byadmin

Aug 19, 2026


உதவித்தொகையில் வெளிநாட்டில் பயிலும் மாணவர்களுக்கு சிக்கல். ( கோப்புப்படம் )

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உதவித்தொகையில் வெளிநாட்டில் பயிலும் மாணவர்களுக்கு சிக்கல். ( கோப்புப்படம் )

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

”என்னுடைய குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் என்பதே பெரிய விஷயம். வெளியூர் சென்று படிப்பதே கனவு என்ற நிலையில், எனக்காக தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு 36 லட்ச ரூபாய் செலவு செய்து லண்டனில் வந்து படிக்க வைப்பதை நினைத்தே பார்க்க முடியவில்லை. அதற்காக தமிழக அரசுக்கு நன்றி சொல்கிறேன். நன்கு படித்து, தமிழகத்தில் என்னால் முயன்ற ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வதே என்னுடைய லட்சியம்!”

தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் உதவித்தொகை பெற்று லண்டனில் படித்துக் கொண்டிருந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, கடந்த 2025 அக்டோபரில் லண்டனில் தான் பங்கேற்ற ஒரு நிகழ்வில் இவ்வாறு பேசிய காணொளியை பிபிசியிடம் பகிர்ந்திருந்தார் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்.

ஆனால் இந்த ஆண்டில் இத்திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை பிரிட்டன் கல்வி நிறுவனங்கள் ஏற்க மறுத்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் 12 அன்று அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அங்குள்ள வேறு சில கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி சேரவிருந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை செல்வதில் ஏற்பட்ட தாமதத்தால் காலக்கெடு முடிந்து சேர்க்கை தடை பட்டிருப்பதாகவும், தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதே கருத்தை பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலரும் பிபிசியிடம் பகிர்ந்துள்ளனர்.

இத்திட்டத்தில் தமிழக மாணவர்கள் பிரிட்டனில் உயர் கல்வி படிப்பதில் இப்போது என்ன சிக்கல்…?

அன்பில் மகேஸ்

பட மூலாதாரம், AnbilMahesh/X

படக்குறிப்பு, இந்த கல்வியாண்டே மாணவர்கள் விரும்பிய கல்லூரிகளில் சேர தீவிரமான நடவடிக்கையை தவெக அரசு எடுக்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் சமூகநீதித் துறையின் கீழ் செயல்படும் ஆதி திராவிடர் நலத்துறையால் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கிய பிற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன் பெறும் வகையில், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை என்ற திட்டம், கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.

By admin