• Sun. Nov 2nd, 2025

24×7 Live News

Apdin News

அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் மோசடி செய்த போலி மருத்துவர் கைது | Fake doctor arrested for defrauding several people by promising them govt jobs in chennai

Byadmin

Nov 1, 2025


சென்னை: யோகா பயிற்​றுநர் மற்​றும் அரசு வேலை வாங்கித் தரு​வ​தாக பலரிடம் லட்​சக்​கணக்​கில் பணத்தை சுருட்​டிய போலி மருத்​து​வர் கைது செய்​யப்​பட்​டார். சென்னை வில்​லி​வாக்​கம், சி.டி.எச். சாலை​யைச் சேர்ந்​தவர் ரத்​தினகு​மாரி (48). இவர் சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலை​யத்​தில் கடந்த 17-ம் தேதி புகார் ஒன்றை அளித்​தார். அதில், “யோ​கா​வில் பிஎச்டி முடித்​து​விட்​டு, யோகா கற்க ஆர்​வ​முள்​ளவர்​களுக்கு நான் பயிற்சி அளித்து வரு​கிறேன்.

2024 டிசம்​பரில் முகநூலில் டாக்​டர் சுரேந்​தர் என்​பவர், ஒரு வருட உணவியல் சான்​றிதழ் படிப்பு வழங்​கு​வ​தாகக் கூறிய விளம்​பரம் செய்​திருந்​தார். இதைப்பார்த்து அவரை தொடர்பு கொண்டேன். அந்த நபர் தன்னை டாக்​டர் சுரேந்​தர் என்​றும், விருதுநகர் மாவட்​ட அரசு மருத்​து​வ​மனை​யில் பணிபுரி​யும் உணவியல் நிபுணர் எனவும் அறி​முகம் செய்​து​ கொண்​டார்.

அவர் சென்னை நேரு ஸ்டேடி​யத்​தில் அதிக சம்​பளத்​துடன் 3 வருட ஒப்​பந்​தத்​தின் அடிப்​படை​யில் யோகா பயிற்​றுநர்​களுக்​கான வேலை பெற்​றுத் தரு​வ​தாக உறு​தி​யளித்​து, ரூ.3.51 லட்​சம் பெற்​றுக் கொண்​டார். ஆனால் வேலை வாங்கித் தரவில்​லை. பணத்​தை​யும் திரும்​பித்தரவில்​லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்​து, பணத்தை திரும்ப பெற்​றுத் தர வேண்​டும்” என புகாரில் தெரி​வித்​திருந்தார்.

இதுகுறித்து போலீ​ஸார் வழக்​குப் பதிந்து சென்​னை​யில் வசிக்​கும் தூத்​துக்​குடி மாவட்​டம், சண்​மு​காபுரம், கிழக்​குத் தெரு​வைச் சேர்ந்த சுரேந்​தரை (30) கைது செய்​தனர். விசா​ரணை​யில் அவர் மருத்​து​வர் இல்லை என்​பதும், ஊட்​டச்​சத்து மற்​றும் உணவியல் என்ற படிப்​பில் பிஎச்​டி-யை ஐதரா​பாத்​தில் உள்ள கல்​லூரி ஒன்​றில் ஆன்​லைனில் படித்து வரு​வதும் தெரிய​வந்​தது.

மேலும் அவர் சென்​னை​யில் உள்ள மருத்​து​வ​மனை ஒன்​றில் ஊட்​டச்​சத்து ஆலோ​சக​ராகப் பணி செய்து வந்​ததும் தெரிய​வந்​தது. அப்​போது, அறி​முக​மான ஆட்டோ ஓட்​டுநர் ஒரு​வரிடம், தான் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்​து​வ​மனை​யில் வேலை செய்​வ​தாகவும், ஓட்டுநரின் உறவினருக்கு அரசு வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி 2018-ல் ரூ.5 லட்​சம் பெற்​றுள்​ளார்.

மேலும் அரும்​பாக்​கத்​தில் அவர் வசித்து வந்த வீட்டு உரிமை​யாளரிடம் ரூ.3 லட்​ச​மும், அதே பகு​தி​யைச் சேர்ந்த இப்​ராஹிம் என்​பவரிட​மும் அரசு வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி ரூ.13.76 லட்​ச​மும் மோசடி செய்​துள்​ளார்.

கரோனா காலத்​தில் வேலைஎது​வும் இல்​லாத​தால் விருதுநகர் மாவட்​டத்​தில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் கரோனா நோயாளி, கர்ப்​பிணி​களுக்கு தானாகவே முன்​வந்து ஊட்​டச்​சத்து ஆலோ​சனை​களை தன்​னார்​வல​ராக வழங்​கி​யுள்​ளார். அதன் பிறகு அவரது பெயருக்கு முன்​னால் ‘டாக்​டர்’ என சேர்த்​துக் கொண்டு மோசடி செய்து, அந்​தப்பணத்​தில் உல்​லாச வாழ்க்கை வாழ்ந்​துள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.



By admin