• Thu. Dec 4th, 2025

24×7 Live News

Apdin News

அரச சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு வருகைதந்துள்ள ஜெர்மன் ஜனாதிபதிக்கு விருந்து

Byadmin

Dec 4, 2025


ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மேயர் (Frank-Walter Steinmeier) தன் மனைவி எல்க்கா பூடன்பென்டருடன் (Elke Budenbender) மூன்று நாட்கள் அரச சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு வருகைதந்துள்ளார்.

இவர்களுக்கு மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா தலைமையிலான அவர குடும்பத்தினரால் விசேட வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், விண்ட்சர் மாளிகையில் பிரம்மாண்ட விருந்தும் வழங்கப்பட்டது.

விருந்துக்கு முன்னதாக உரையாற்றிய மன்னர் சார்லஸ், ரஷ்யா தனது ஆக்கிரமிப்பு முயற்சிகளைத் தொடரும் நிலையில், இங்கிலாந்தும் ஜெர்மனியும் ஐரோப்பாவைக் காக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

ரஷ்யா குறித்த எண்ணம் விருந்தினர்களை ஆழ்ந்து சிந்திக்க வைத்திருந்த நேரத்தில், நிலைமையை சற்றே லேசாக்குவதற்காக பிரபல நகைச்சுவை வாக்கியம் ஒன்றையும் மன்னர் சார்லஸ் மேற்கோள் காட்டினார்.

இங்கிலாந்தும் ஜெர்மனியும் கால்பந்து விளையாட்டு மீதான ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்வது குறித்துக் குறிப்பிட்ட மன்னர், “in the end, the Germans win” என்பதில் கொஞ்சம் உண்மை இருப்பதாகவும் வேடிக்கையாக கூறினார்.

1990ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து போட்டியின்போது, வர்ணனையாளராக செயல்பட்ட முன்னாள் இங்கிலாந்து அணி வீரரான கேரி லினிக்கர் என்பவர் இந்த வாக்கியத்தைப் பயன்படுத்தினார்.

‘கால்பந்து என்பது ஒரு எளிமையான விளையாட்டு: 22 பேர் 90 நிமிடங்களாக ஒரு பந்தைத் துரத்துவார்கள், ஆனால், இறுதியில், எப்போதுமே ஜெர்மனிதான் போட்டியில் வெற்றிபெறும்’ என்றார் கேரி.

ஜெர்மன் ஜனாதிபதிக்கு விருந்தளிக்கும்போது, கேரியின் கூற்றைத்தான் மன்னர் சார்லஸ் வேடிக்கையாக மேற்கோள் காட்டினார்.

அரச சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு வருகைதந்துள்ள ஜெர்மன் ஜனாதிபதிக்கு விருந்துஅரச சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு வருகைதந்துள்ள ஜெர்மன் ஜனாதிபதிக்கு விருந்து

By admin