• Sat. Oct 4th, 2025

24×7 Live News

Apdin News

அரச – தனியார் மருந்துகளின் வித்தியாசம் என்ன?

Byadmin

Oct 4, 2025


அரச மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு தரும் மருந்துகளுக்கு இடையே என்ன வித்தியாசம் உள்ளது என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? ஆம், அப்படி என்ன வித்தியாசம் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

உதாரணம்: Metformin 500 (சர்க்கரை மாத்திரை)

இரண்டுமே ஒரே மாத்திரையா? தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கிறதே “ஒரிஜினல்”ன்னு சொல்லலாமா?

👉 இந்தக் கோள்விக்கான பதில் – வித்தியாசமே இல்லை என்றுதான் கூற வேண்டும். காரணம்…!

மருந்துகள் எப்படி வரும்?
1. Branded Drug (பிராண்டட் மருந்து)

ஒரு கம்பெனி பல வருட ரிசர்ச் பண்ணி, கோடிகள் செலவு பண்ணி, ஒரு புதிய மருந்து (Formula) கண்டுபிடிக்கிறது.

அதுக்கு Patent (20 வருடம்) வாங்கிக்கறாங்க.

அந்த காலத்தில் அந்த மருந்தை அவர்கள் மட்டும் தான் விற்க முடியும்.

அதிக விலைக்கு, தனி Brand Name வச்சு விற்கிறாங்க.

காரணம்: ரிசர்ச் செலவெல்லாம் மீட்கணும்.

2. Generic Drug (ஜெனரிக் மருந்து)

அந்த 20 வருடம் முடிந்ததும், Formula பப்ளிக் ஆகிடும்.

வேறு கம்பெனிகள் அதே Formula-வைக் கொண்டு மருந்து தயாரிக்கலாம்.

ஆனால், தரத்தை நிரூபிக்க Biosimilar tests கடப்பது அவசியம்.

CDSCO, FDA மாதிரி அரசு அமைப்புகள் செக் பண்ணி ஓகே சொன்னதுக்கு அப்புறம்தான் விற்க அனுமதி.

அப்புறம் கூட திடீர் ஆய்வுகள் (Surprise audits) நடக்கும்.

அப்போ விலை ஏன் வித்தியாசம்?

Branded மருந்து: ரிசர்ச் செலவுகள் + பெயர் = விலை அதிகம்.

Generic மருந்து: ரிசர்ச் செலவு இல்லாததால் விலை குறைவு.

தரம் கம்மி இல்ல! அதே Formula, அதே Effect.

அரசு மருத்துவமனைகளில் தர்ற மருந்துகள்

அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை – இவங்க தர்றது Generic Drugs தான்.

அதனால, அரசு மருத்துவமனை Metformin-ம், பிரைவேட் டாக்டர் Metformin-ம் – ஒன்றே!

அடிக்கடி வரும் சந்தேகங்கள்

Patent முடிஞ்சப்புறம் ஏன் அந்த Branded மருந்தை இன்னும் விக்கறாங்க?

சட்டப்படி விற்கக் கூடாதுன்னு எதுவும் கிடையாது.

அவங்க பிராண்டு பெயரை வைத்தே தொடரலாம்.

அப்போ நாம ஏன் Branded வாங்கணும்?

அவசியமில்லை!

ஆனாலும் நம்ம பழக்கத்தாலும், மனதில் இருக்கும் தவறான எண்ணங்களாலும் நாம வாங்குறோம்:

பெயர் தெரியாதது: Chemical Name (Metformin) தெரியாம, Brand Name-ஐ மட்டும் கேக்குறது.

தவறான எண்ணம்: விலை அதிகம் = நல்லது, விலை குறைவு = கம்மி தரம் என்று நினைப்பது.

லாபம்: Medical shop-க்களுக்கு Branded மருந்தில்தான் அதிக கமிஷன் கிடைக்கும்.

✅ உண்மையில் அரசு மருத்துவமனையில் தருகின்ற மருந்தும், பிரைவேட் டாக்டர்கிட்ட வாங்குற அதே Formula மருந்தும் – ஒன்றுதான்! நிம்மதியாய் சாப்பிடலாம்.

By admin