• Wed. Oct 8th, 2025

24×7 Live News

Apdin News

அரச தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள்; சாதனைப் பயணம் தொடரட்டும்: மோடிக்கு அன்புமணி வாழ்த்து | Anbumani congratulates Prime Minister Modi

Byadmin

Oct 8, 2025


சென்னை: இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சித் தலைவர் பதவியில் 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சித் தலைவர் பதவியில் 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி இந்த சாதனைப் பயணம் 2001-ஆம் ஆண்டு புஜ் நில நடுக்கத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் அம்மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றதில் தொடங்கியது.

அதன்பின் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் 135 நாள்கள் அந்தப் பதவியில் தொடர்வதன் மூலம், ஜவஹர்லால் நேருக்கு அடுத்தபடியாக தொடர்ச்சியாக அப்பதவியில் நீடிக்கும் இரண்டாவது தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

பிரதமர் மோடியின் பதவிக்காலத்தில் உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



By admin